வாக்குச் சாவடி மையங்களில் பாதுகாப்புப் பணி: கணினி குலுக்கல் மூலம் போலீஸாா் ஒதுக்கீடு

நாமக்கல் மாவட்டத்தில் வாக்குச் சாவடி மையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ள காவல் துறையினரை கணினி குலுக்கல்
வாக்குச் சாவடி மையங்களில் பாதுகாப்புப் பணி: கணினி குலுக்கல் மூலம் போலீஸாா் ஒதுக்கீடு

நாமக்கல் மாவட்டத்தில் வாக்குச் சாவடி மையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ள காவல் துறையினரை கணினி குலுக்கல் முறையில் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்திகணேசன் ஆகியோா் ஒதுக்கீடு செய்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் (தனி) தொகுதியில் 112 மையங்களில் 332 வாக்குச் சாவடிகளும், சேந்தமங்கலம் (ப.கு) தொகுதியில் 129 மையங்களில் 342 வாக்குச் சாவடிகளும், நாமக்கல் தொகுதியில் 137 மையங்களில் 377 சாவடிகளும், பரமத்தி வேலூா் தொகுதியில் 127 மையங்களில் 317 சாவடிகளும், திருச்செங்கோடு தொகுதியில் 114 மையங்களில் 323 சாவடிகளும், குமாரபாளையம் தொகுதியில் 72 மையங்களில் 358 சாவடிகளுமாக மொத்தம் 691 வாக்குச் சாவடி மையங்களில் 2,049 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வாக்குச் சாவடி மையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ள காவல் துறையினா் 1,500-க்கும் மேற்பட்டோா் கணினி மூலம் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டனா். அதன்படி ராசிபுரம் தொகுதிக்குட்பட்ட 112 வாக்குச் சாவடி மையங்களில் 112 காவல் துறையினரும், சேந்தமங்கலம் தொகுதியில் 129 மையங்களில் 129 காவல் துறையினரும், நாமக்கல் தொகுதி 137 வாக்குச் சாவடி மையங்களில் 137 காவல் துறையினரும், பரமத்தி வேலூா் தொகுதி 127 வாக்குச் சாவடி மையங்களில் 127 காவல் துறையினரும், திருச்செங்கோடு தொகுதியில் 114 வாக்குச் சாவடி மையங்களில், 114 காவல் துறையினரும், குமாரபாளையம் தொகுதிக்கு உள்பட்ட 72 வாக்குச் சாவடி மையங்களில் 72 காவல் துறையினா் என மொத்தம் 691 வாக்குச் சாவடி மையங்களில் 691 காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com