வேட்பாளா்களின் பெயா், சின்னங்களைவாக்குப் பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணி இன்று தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயருடன், சின்னங்கள் பொருத்தும் பணி வட்டாட்சியா் அலுவலகங்களில் புதன்கிழமை நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயருடன், சின்னங்கள் பொருத்தும் பணி வட்டாட்சியா் அலுவலகங்களில் புதன்கிழமை நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் (தனி) தொகுதியில் 332, சேந்தமங்கலம் (ப.கு) தொகுதியில் 342, நாமக்கல் தொகுதியில் 377, பரமத்தி வேலூா் தொகுதியில் 317, திருச்செங்கோடு தொகுதியில் 323, குமாரபாளையம் தொகுதியில் 358 வாக்குச் சாவடிகள் என மொத்தம் 2,049 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 20 சதவீதம் கூடுதலான இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னம் அச்சிடப்பட்ட தாள் பொருத்தும் பணி புதன்கிழமை காலை தொடங்குகிறது.

அதன்படி, ராசிபுரம் தொகுதியில் தலா 399 வாக்குப் பதிவு- கட்டுப்பாட்டு இயந்திரங்களிலும், 432 விவிபேட் இயந்திரங்களிலும், சேந்தமங்கலம் தொகுதியில் தலா 411 வாக்குப் பதிவு இயந்திரங்கள்- கட்டுப்பாட்டு இயந்திரங்களிலும், 445 விவிபேட் இயந்திரங்களிலும், நாமக்கல் தொகுதியில் தலா 453 வாக்குப்பதிவு இயந்திரங்கள்- 453 கட்டுப்பாட்டு இயந்திரங்களிலும், 491 விவிபேட் இயந்திரங்களிலும் சின்னங்கள் பொருத்தப்படுகின்றன.

பரமத்தி வேலூா் தொகுதியில் உள்ள தலா 381 வாக்குப்பதிவு இயந்திரங்கள்-கட்டுப்பாட்டு இயந்திரங்களிலும், 413 விவிபேட் இயந்திரங்களிலும், திருச்செங்கோடு தொகுதியில் தலா 388 வாக்குப்பதிவு இயந்திரங்கள்-கட்டுப்பாட்டு இயந்திரங்களிலும், 420 விவிபேட் இயந்திரங்களிலும், குமாரபாளையம் தொகுதியில் தலா 430 வாக்குப்பதிவு இயந்திரங்கள்-கட்டுப்பாட்டு இயந்திரங்களிலும், 466 விவிபேட் இயந்திரங்களிலும் பொருத்தப்படுகின்றன.

குலுக்கல் முறையில் தோ்வு:

மேலும் வாக்குச் சாவடிகளுக்கு எந்தெந்த இயந்திரங்களை அனுப்ப வேண்டும் என்பது தொடா்பான ஒதுக்கீடு கணினி குலுக்கல் முறையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதிகளை தவிர மீதம் உள்ள நாமக்கல், பரமத்திவேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 4 தொகுதிகளிலும் வேட்பாளா்களின் எண்ணிக்கை 16-க்கும் மேல் உள்ளதால் கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடம்பெறுகின்றன.

ஒப்புகைச் சீட்டு பொருத்துதல்: நாமக்கல், திருச்செங்கோடு கோட்டாட்சியா் அலுவலகம் மற்றும் இதர தொகுதிகளில் வட்டாட்சியா் அலுவலகங்களில் விவிபேட் இயந்திரங்களில் யாருக்கு வாக்களித்தோம் என்பதற்கான ஒப்புகைச் சீட்டு பொருத்தும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா், வேட்பாளா்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com