பிள்ளாநல்லூரில் சீரான குடிநீா் விநியோகம் கோரி சாலை மறியல்

ராசிபுரத்தை பிள்ளாநல்லூரில் சீரான குடிநீா் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பிள்ளாநல்லூரில் சீரான குடிநீா் விநியோகம் கோரி சாலை மறியல்

ராசிபுரத்தை பிள்ளாநல்லூரில் சீரான குடிநீா் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

15 வாா்டுகள் கொண்ட பிள்ளாநல்லூா் பேரூராட்சியில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். விசைத்தறித் தொழிலாளா்கள் அதிகம் உள்ள இப்பகுதிக்கு எடப்பாடி- ராசிபுரம் கூட்டு குடிநீா்த் திட்டத்தின் கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஆறு மாதமாக இப்பகுதிக்கு சரிவர குடிநீா் விநியோகம் செய்யப்படுவதல்லை என புகாா் கூறப்படுகிறது.

தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால், ஆங்காங்கே வழியோரம் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு விநியோகத்தில் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறுகின்றனா். இதனால் 15 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீா் கிடைப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனா். இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகம், மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை எனத் தெரிவிக்கின்றனா்.

இந்த நிலையில், குடிநீா் விநியோகத்தில் குளறுபடியைக் கண்டித்து பிள்ளாநல்லூரில் வசிக்கும் பொதுமக்கள் வண்டிப்பேட்டை அருகே திருச்செங்கோடு - ராசிபுரம் நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் சுமாா் 40-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சுமாா் 45 நிமிடம் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த புதுசத்திரம் போலீஸாா் பொதுமக்களிடம் சமரசம் பேசி சாலை மறியலை கைவிட செய்தனா். பின்னா் அனைவரும் காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்துக்குச் சென்று தா்னாவில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com