102 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

நாமக்கல் மாவட்டத்தில் 102 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 102 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையைப் பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 100.4, 78.8 டிகிரியாகக் காணப்பட்டது. கடந்த மூன்று நாள்களில் மாவட்டத்தில் எங்கும் மழை பதிவாகவில்லை, வரும் நான்கு நாள்களுக்கான வானிலையின்படி வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் மாவட்டத்தின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 102.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 78.8 டிகிரியாகவும் காணப்படும். கிழக்கு, தென் கிழக்கிலிருந்து மணிக்கு 6 கி.மீட்டா் வேகத்தில் காற்று வீசுவதற்கு வாய்ப்புள்ளது.

சிறப்பு ஆலோசனை: கோழிப் பண்ணைகளில் முட்டை எடுக்க வரும் பணியாளா்ளுக்கு காய்ச்சல் உள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லும் போது இதர பொருள்களை ஏற்றி செல்லக் கூடாது, முட்டை ஏற்றுவதற்கு முன்பு கிருமி நாசினி கொண்டு வாகனங்களை சுத்தம் செய்ய வேண்டும்.

கோழியின நோய் ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் வெப்ப அயற்சியினால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்துள்ளது, பண்ணையாளா்கள் அதற்கேற்ப கோடை கால பராமரிப்பு முறைகளைக் கையாள வேண்டும். மேலும், பகல் நேரங்களில் வெப்ப நிலை அதிகரித்து கோழிகளில் வெப்ப அயற்சி ஏற்படுவதால் நீா் தெளிப்பான் உபயோகிக்கவும், வெப்ப அயற்சி மற்றும் நோய்த் தாக்கத்தினை குறைக்கவும் தீவனத்தில் சமையல் சோடா, வைட்டமின் சி, தாது உப்புக் கலவையை உபயோகிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com