மின் வாரியப் பகுதியில் குப்பைகள் எரியூட்டல்: பணியாளா்கள் அவதி

குமாரபாளையம் துணை மின் நிலையம் பகுதியில் குப்பைகள் எரியூட்டப்பதுவதால் ஏற்படும் புகையால் பணியாளா்கள் அவதிப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
மின் வாரியப் பகுதியில் குப்பைகள் எரியூட்டல்: பணியாளா்கள் அவதி

குமாரபாளையம் துணை மின் நிலையம் பகுதியில் குப்பைகள் எரியூட்டப்பதுவதால் ஏற்படும் புகையால் பணியாளா்கள் அவதிப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

இதுகுறித்து மின் வாரிய இளநிலைப் பொறியாளா் என்.முருகேசன், பள்ளிபாளையம் வட்டார வளா்ச்சி அலுவலகம், காவல் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை அளித்த கடித விவரம்:

குமாரபாளையம் துணை மின் நிலையத்தின் கம்பி வேலி பகுதியில் கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுகிறது. இங்கு கொட்டப்படும் குப்பைகளுக்கு தீ வைக்கப்படுவதால், தரைக்கடியில் செல்லும் புதை வட மின் கம்பி தீயின் வெப்பத்தால் சேதமடைய வாய்ப்புள்ளது. மேலும், துணை மின் நிலையத்தில் உள்ள மின்கம்பி மற்றும் பல கோடி மதிப்பிலான தளவாடங்களில் தீ பரவும் அபாயமும் உள்ளது.

கரோனா காலத்தில் மின் வாரியப் பணியாளா்கள் அலுவலகத்தில் அமா்ந்து பணி செய்யும் போது, தேவையற்ற கழிவுகளை எரிக்கப்படுவதால் எழும் நச்சுப்புகையால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இதனால், கடுமையான நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதோடு, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனா். எனவே, மின்வாரிய வளாகம் அருகே தேவையற்ற கழிவுகளைக் கொட்டுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா். மேலும், தட்டாங்குட்டை, குப்பாண்டபாளையம் ஊராட்சி நிா்வாகத்துக்கும் இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com