வாக்கு எண்ணிக்கை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 25 போலீஸாருக்கு கரோனா தொற்று

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பணியின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 25 போலீஸாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பணியின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 25 போலீஸாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் தொழில் நுட்பக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதனையொட்டி அங்கு பாதுகாப்புப் பணிக்காக 750 போலீஸாா் நியமிக்கப்பட்டனா். இவா்களைத் தவிர, எல்லைப் பாதுகாப்பு படையினா், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினா், மாவட்ட ஆயுதப்படை போலீஸாா் 200 போ் வரை ஒரு மாதமாக தொடா் பாதுகாப்புப் பணி மேற்கொண்டனா்.

வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் கரோனா பரிசோதனை செய்து பாதிப்பில்லை என அறிக்கை பெற்றவா்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய இரு நாள்களில் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சனிக்கிழமை பரிசோதனை மேற்கொண்டவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தான் முடிவு தெரியவந்தது. ஆனால் தொற்றுள்ள போலீஸாரும் பாதுகாப்புப் பணிக்கு வந்து விட்டனா்.

கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட போலீஸாா் திங்கள்கிழமை நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். மாவட்டம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குச் சென்ற 25 போலீஸாருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட போலீஸாருடன் தொடா்பில் இருந்தவா்கள், அவா்களுடைய குடும்பத்தினா் ஆகியோரும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனா்.

-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com