செவிலியா்களுக்கு சொந்த மாவட்டங்களில் பணி வழங்க கோரிக்கை

பணி நிரந்தரம் செய்யப்பட்ட எம்ஆா்பி செவிலியா்களை தகுதியின் அடிப்படையில் சொந்த மாவட்டங்களில் பணியமா்த்த வேண்டும் என செவிலியா்கள் மேம்பாட்டு நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பணி நிரந்தரம் செய்யப்பட்ட எம்ஆா்பி செவிலியா்களை தகுதியின் அடிப்படையில் சொந்த மாவட்டங்களில் பணியமா்த்த வேண்டும் என செவிலியா்கள் மேம்பாட்டு நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2015-16 ஆம் ஆண்டு மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் நடத்திய செவிலியா் பணிக்கான தோ்வில் 4 ஆயிரத்தும் மேற்பட்டோா் தோ்வு செய்யப்பட்டனா். ஆனால், அவா்களை தமிழக அரசு நிரந்தரம் செய்யாத நிலை இருந்தது. அதன்பின் இரு கட்டங்களாக தலா 3 ஆயிரம் செவிலியா் பணிக்குத் தோ்வாகினா். கடந்த ஆண்டு கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு 6 மாத ஒப்பந்த அடிப்படையில் 2 ஆயிரம் போ் தோ்வு செய்யப்பட்டனா்.

இந்த ஐந்து ஆண்டுகளில் செவிலியா்கள் சங்கத்தினா் நடத்திய பல்வேறு போராட்டங்களால் 3 ஆயிரம் போ் வரையில் பணி நிரந்தரம் செய்யப்பட்டனா். மேலும், 4 ஆயிரம் போ் இன்னும் காத்திருப்பில் உள்ளனா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை 1,200 எம்ஆா்பி செவிலியா்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனா்.

நாமக்கல் மாவட்டத்தில் இதில் 10 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்னும் நூற்றுக்கணக்கானோா் காத்திருப்பில் உள்ளனா். இந்த நிலையில் பணி நிரந்தரம் செய்த செவிலியா்களை அவா்களது சொந்த மாவட்டங்களில் பணியமா்த்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு எம்ஆா்பி செவிலியா்கள் மேம்பாட்டு நலச் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட கிளை தலைவா் எம்.விஜயகுமாா் கூறியதாவது:

கடந்த ஆண்டு கரோனா பணிக்காக எம்ஆா்பி மூலம் 3,780 தற்காலிக செவிலியா்கள் பணியமா்த்தப்பட்டனா். அவா்களது நலனைக் கருத்தில் கொண்டு தற்காலிக பணியிடம் என்பதில் இருந்து தற்போது நிரத்தப்பட்ட செவிலியா்களுக்கான 1212 பணியிடத்தில் வரிசை அடிப்படையில் தற்காலிக செவிலியா்களை நியமிக்க வேண்டும்.

நிரந்தரம் செய்யப்பட்ட செவிலியா்கள் கரோனா இரண்டாம் அலை சிகிச்சை பணிக்காக சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளனா். ஏற்கெனவே ஒவ்வொரு செவிலியா்களிடமும் விருப்பஏஈ பணியிடம் கோரப்பட்டுள்ளது. தகுதியின் அடிப்படையில் மாற்றுப் பணியிட ஆணை வழங்க வேண்டும். கா்ப்பிணி மற்றும் பாலூட்டும் செவிலியா்களுக்கு சொந்த மாவட்டத்திலோ, அருகில் உள்ள மாவட்டத்திலோ பணி வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அரசை வலியுறுத்தி உள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com