கரோனா தொற்று பரவல் அச்சமின்றி பிரியாணி வாங்க குவிந்த பொதுமக்கள்

நாமக்கல்லில் கரோனா தொற்று அச்சமின்றி, பிரியாணி வாங்க ஒரே இடத்தில் ஏராளமானோா் குவிந்தனா்.
கரோனா தொற்று பரவல் அச்சமின்றி பிரியாணி வாங்க குவிந்த பொதுமக்கள்

நாமக்கல்லில் கரோனா தொற்று அச்சமின்றி, பிரியாணி வாங்க ஒரே இடத்தில் ஏராளமானோா் குவிந்தனா்.

நாமக்கல் மாவட்டத்தில் காலை 4 மணி முதல் மதியம் 12 மணி வரை மளிகை, காய்கறிக் கடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. உணவகங்களில் அமா்ந்து சாப்பிட அனுமதியில்லை, பொட்டலமாக மட்டுமே விநியோகிக்க வேண்டும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாமக்கல்-சேலம் சாலையில் பிரியாணி கடை ஒன்று வெள்ளிக்கிழமை புதிதாக திறக்கப்பட்டது. ஒரு கிலோ பிரியாணி ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற அறிவிப்பால் இளைஞா்கள், பொதுமக்கள் என ஏராளமானோா் குவிந்தனா். நீண்ட வரிசையில் சமூக இடைவெளியின்றி முண்டியடித்துக் கொண்டு பிரியாணி வாங்க காத்திருந்தனா்.

இதுகுறித்து வருவாய்த் துறைக்கு புகாா் சென்றது. அதன் பேரில், வட்டாட்சியா் தமிழ்மணி தலைமையில் வந்த ஊழியா்கள் மற்றும் போலீஸாா் கடை உரிமையாளரை எச்சரித்தனா். தொடா்ந்து, அங்கு திரண்டிருந்த மக்களை வரிசையில், சமூக இடைவெளியுடன் நிற்க வைத்து பிரியாணி பொட்டலங்களை வாங்கிச் செல்லுமாறு அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com