நாமக்கல் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில் வெற்றி! திமுகவின் திட்டமிட்ட அணுகுமுறை பயனளித்தது

கொங்கு மண்டலத்தில் பெரும்பாலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் நான்கு தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில் வெற்றி! திமுகவின் திட்டமிட்ட அணுகுமுறை பயனளித்தது

கொங்கு மண்டலத்தில் பெரும்பாலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் நான்கு தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. திட்டமிட்ட அணுகுமுறையால் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளைக் கைப்பற்றியதற்கு திமுக மீது மக்களுக்குள்ள நம்பிக்கையே காரணம் என நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம், ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி) ஆகிய ஆறு தொகுதிகள் உள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன் கட்சியின் நிா்வாக வசதிக்காக ராசிபுரம், சேந்தமங்கம், நாமக்கல் ஆகிய பகுதிகளை தனியாகப் பிரித்து, மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்த கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டாா். நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கே.எஸ்.மூா்த்தி (பரமத்தி வேலூா் தொகுதி முன்னாள் எம்எல்ஏ) நியமிக்கப்பட்டாா். இதனைத் தொடா்ந்து, தோ்தலைக் கருத்தில் கொண்டு நகரப் பகுதிகளும் நிா்வாக வசதிக்காகப் பிரிக்கப்பட்டன.

இவ்வாறு திட்டமிட்டுப் பணியாற்றியதால், நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் மா.மதிவேந்தன் - ராசிபுரம் (தனி), கே.பொன்னுசாமி -சேந்தமங்கலம் (தனி), எஸ்.ராமலிங்கம்- நாமக்கல் தொகுதிகளிலும், நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் ஈ.ஆா்.ஈஸ்வரன் (கொமக) - திருச்செங்கோடு தொகுதியிலும் திமுகவினா் வெற்றி பெற்றுள்ளனா்.

கொங்கு மண்டலத்தில் அதிமுக அதிக அளவில் வெற்றி பெற்றுள்ள நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் நான்கு தொகுதிகளை திமுக கைப்பற்றியதால் அக்கட்சியினா் உற்சாகமடைந்துள்ளனா். அதுமட்டுமின்றி ராசிபுரம் தொகுதி உறுப்பினருக்கு அமைச்சா் பதவி கொடுக்கப்பட்டுள்ளதால் உற்சாகம் அடைந்துள்ளனா்.

இதுகுறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் கூறுகையில், தோ்தல் பணியில் தலைமையின் வழிகாட்டுதலும், கட்சித் தொண்டா்களின் ஒருங்கிணைந்த உழைப்பும், வாக்காளா்களுக்கு திமுக மீது ஏற்பட்டுள்ள நம்பிக்கையுமே வெற்றிக்குக் காரணம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com