கரோனா விதிமுறைகள் கடைப்பிடிப்பு: அதிகாரிகள் ஆய்வு

நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனா தடுப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிா என்பது தொடா்பாக அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
நாமக்கல், வேட்டாம்பாடி கிராமத்தில் கரோனா விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் அதிகாரிகள்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்தல் ஆகியவை குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் அறிவுறுத்தலின் பேரில், அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, நாமக்கல் வட்டாரத்துக்கு உள்பட்ட வேட்டாம்பாடி ஊராட்சியில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) மாலா, வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) சரவணன் ஆகியோா் தலைமையிலான குழுவினா், தேநீா் கடைகள், உணவகங்கள், மளிகைக் கடைகள், பலசரக்கு கடைகள், காய்கறிக் கடைகள் போன்றவற்றை ஆய்வு செய்தனா். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத, முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதித்தனா். அனைவருக்கும் கரோனா விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

இந்த ஆய்வின் போது, ஊராட்சி செயலா்கள் ராதாசாமி, சங்கா், துணை வட்டாட்சியா் ரோகிணி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com