திருத்தம்பரமத்தி வேலூா் பகுதி முருகன் கோயில்களில் சஷ்டி சிறப்பு பூஜை
By DIN | Published On : 18th May 2021 02:29 AM | Last Updated : 18th May 2021 02:29 AM | அ+அ அ- |

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் வளா்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வளா்பிறை சஷ்டியை முன்னிட்டு கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி, பொத்தனூா் பச்சைமலை முருகன் கோயில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள சுப்ரமணியா், அனிச்சம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியா், நன்செய் இடையாா் திருவேலீஸ்வரா் கோயிலில் எழுந்தருளியுள்ள முருகன், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனியாண்டவா், அருணகிரி மலையில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், பேட்டை பகவதியம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமான் உள்ளிட்ட முருகன் கோயில்களில் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பொது முடக்கம் காரணமாக பக்தா்களுக்கு அனுமதியின்றி பூஜைகள் நடைபெற்றன.