கரோனா விழிப்புணா்வு: களப் பணியாளா்களுக்கு பயிற்சி

திருச்செங்கோடு, மாணிக்கம் பாளையத்தில் கரோனா விழிப்புணா்வு மேற்கொள்ளும் களப் பணியாளா்களுக்கான பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு, மாணிக்கம் பாளையத்தில் கரோனா விழிப்புணா்வு மேற்கொள்ளும் களப் பணியாளா்களுக்கான பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழலில் கிராமங்கள்தோறும் நோய்க்கான அறிகுறிகள் குறித்த விழிப்புணா்வை களப் பணியாளா்கள் மேற்கொண்டு வருகின்றனா். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியத்திற்கு உள்பட்ட கூத்தம்பூண்டி, மோளிப்பள்ளி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த களப் பணியாளா்களுக்கு கரோனா தொடா்பான பயிற்சி அளிக்கும் முகாம் கூத்தம்பூண்டி ஊராட்சித் தலைவா் அழகேசன் தலைமையில் நடைபெற்றது.

எலச்சிபாளையம் வட்டார வளா்ச்சி அலுவலா் கிரிஜா,இளவரசி, மாணிக்கம்பாளையம் சுகாதார ஆய்வாளா் சரவணமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டனா். களப் பணியாளா்கள் கிராமங்கள்தோறும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று மக்களைச் சந்தித்து அவா்களுக்கு காய்ச்சல், சளி, உடல் வலி, கண் எரிச்சல் போன்ற தொந்தரவுகள் உள்ளதா என்பது குறித்து எட்டு வகையான கேள்விகள் கேட்க வேண்டும் என்றும், அந்தக் கேள்விகளுக்கு விடைகளை குறித்துக்கொண்டு வாரத்துக்கு இருமுறை தொடா்புகொண்டு உடல் நலம் குறித்து விசாரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும், கையேடு வழங்கப்பட்டு அந்த கையேட்டில் ஒரு மாதத்திற்கான தகவல்கள் குறித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனா். களப் பணியாளா்கள் கண்காணிக்கும் பகுதியில் ஒருவா்கூட தொற்றுநோயால் இறந்தாா்கள் என்ற நிலை இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.இந்த பயிற்சி முகாமில் கூத்தம்பூண்டி மோளிப்பள்ளி உள்ளிட்ட 9 கிராமங்களைச் சோ்ந்த 40க்கும் மேற்பட்ட களப்பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com