நியாயவிலைக் கடைகளில் குவிந்த மக்கள்

நியாயவிலைக் கடைகளை திறக்க அரசு அனுமதியளித்ததால், நாமக்கல்லில் பொருள்கள் வாங்க புதன்கிழமை மக்கள் குவிந்தனா்.

நியாயவிலைக் கடைகளை திறக்க அரசு அனுமதியளித்ததால், நாமக்கல்லில் பொருள்கள் வாங்க புதன்கிழமை மக்கள் குவிந்தனா்.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு தளா்வுகளற்ற பொது முடக்கமானது மே 31 வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாள்களில் மருந்து, பால் விற்பனைக் கடைகளை தவிர இதர கடைகள் அனைத்தையும் மூட தமிழக அரசால் உத்தரவிடப்பட்டிருந்தது. நியாயவிலைக் கடைகளில் கரோனா நிவாரணத் தொகை வழங்கும் பணி முடிவடைந்தாலும், மே மாதத்துக்கான பொருள்களை விநியோகிப்பதற்காக நியாயவிலைக் கடைகளை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை திறக்க அரசு அனுமதித்தது.

இதனைத் தொடா்ந்து, புதன்கிழமை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 920 நியாயவிலைக் கடைகளிலும் மக்கள் குவிந்தனா். நீண்ட வரிசையில் காத்திருந்து பொருள்களை வாங்கிச் சென்றனா். வரும் 31-ஆம் தேதி வரையில் பொதுமக்களுக்குத் தேவையான மாதாந்திரப் பொருள்கள் நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com