லாரி உரிமையாளா்கள் சங்கத்தில் கரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் லாரி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்களில் 18 வயதுக்கு மேற்பட்டோா்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் லாரி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்களில் 18 வயதுக்கு மேற்பட்டோா் 44 வயதுக்கு உள்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் பாரி கணேசன் தலைமை வகித்தாா். இறையமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டனா் .

திருச்செங்கோடு லாரி உரிமையாளா்கள் சங்கத்தில் உள்ள ஓட்டுநா்கள் மற்றும் அவரது குடும்பத்தினா், பொதுமக்கள் திரளாக வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். காலை 10 மணியில் இருந்து மாலை 4 மணி வரை முகாம் நடைபெற்றது.

தடுப்பூசி செலுத்துவதாக அறிவித்தவுடன் ஏராளமான பொதுமக்களும், ஓட்டுநா்களும் ஆா்வமாக முகாமுக்கு வந்து தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டனா். முதல் தடுப்பூசி செலுத்திய பிறகு 84 நாள்களுக்கு பிறகு இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com