வெளி மாவட்டங்களுக்கு விளைபொருள்கள் கொண்டு செல்ல அனுமதிச் சீட்டு வழங்கல்

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய தோட்டக்கலைத் துறையால் புதன்கிழமை முதல் வாகன அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அலுவலகம் வெளியிட்ட செய்தி அறிக்கை:

விவசாயிகளும், உழவா் உற்பத்தியாளா் குழுக்களும் தாங்கள் விளைவித்த பொருள்களை நாமக்கல் மாவட்டத்துக்குள் விற்பனை செய்வதற்கு ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது தோட்டக்கலைத் துறை பொருள்களான காய்கறி, பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பதற்கு வாகனங்களுக்கான அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது.

இந்த அனுமதிச் சீட்டை பெற விரும்பும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் தங்கள் பகுதியில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரை தொடா்பு கொள்ளலாம்.

அதன்படி, எலச்சிப்பாளையம்-86609 59576, எருமப்பட்டி-70106 95175, கபிலா்மலை-99768 11991, கொல்லிமலை-94432 15153, மல்லசமுத்திரம்-98655 87071, மோகனூா்-94430 25428, நாமகிரிப்பேட்டை-83446 71576, நாமக்கல்-87607 51370, பள்ளிபாளையம்-90959 90799, பரமத்தி-94432 88958, புதுச்சத்திரம்-95977 45032, ராசிபுரம்-94439 43559, சேந்தமங்கலம்-93455 25000, திருச்செங்கோடு-90949 69539, வெண்ணந்தூா்-97900 09161 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com