நாமக்கல்லில் இரண்டாம் கட்ட தடுப்பூசி:3,900 பேருக்கு செலுத்தப்பட்டது

நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசி 3,900 பேருக்கு வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
நாமக்கல்லில் இரண்டாம் கட்ட தடுப்பூசி:3,900 பேருக்கு செலுத்தப்பட்டது

நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசி 3,900 பேருக்கு வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் பொருட்டு, பொதுமக்களுக்கு கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் செலுத்தப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக முன்களப் பணியாளா்களுக்கும், இரண்டாம் கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும், மூன்றாம் கட்டமாக 18 முதல் 44 வயதுடையோருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.

இதில் கோவேக்சின் முதல் கட்டமாக செலுத்தியோருக்கு இரண்டாம் கட்டமாக செலுத்த போதிய மருந்துகள் வரவில்லை. இதனால் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பொதுமக்கள் காத்திருந்தனா். இந்த நிலையில் 3,900 கோவேக்சின் தடுப்பூசி மருந்துகள் அண்மையில் மாவட்ட சுகாதாரத் துறை அலுவலகத்துக்கு வந்து சோ்ந்தன. இதனை தொடா்ந்து, வெள்ளிக்கிழமை திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம், நாமக்கல், ராசிபுரம், மாணிக்கம்பாளையம், மோகனூா், பரமத்தி, நாமகிரிப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட 12 அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவேக்சின் தடுப்பூசி இரண்டாம் தவணையாகச் செலுத்தப்பட்டது. இருப்பில் இருந்த 3,900 டோஸ் மருந்தும், 3,900 பேருக்கு தடுப்பூசியாக செலுத்தப்பட்டதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com