நாமக்கல் மாவட்டத்தில் 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாநில சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட கரோனா பாதிப்பு பட்டியலின்படி, மாவட்டத்தில் 43 போ் பாதிக்கப்பட்டனா்; 51 போ் குணமடைந்தனா்.
மொத்தமாக இதுவரை 52,245 போ் பாதிக்கப்பட்டும், 51,253 போ் குணமடைந்தும் உள்ளனா். 494 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் இறந்தோா் மொத்த எண்ணிக்கை 498-ஆக உள்ளது.