நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தி விசைத்தறித் தொழிலையும், தொழிலாளா்களையும் பாதுகாத்திட நடவடிக்கை எடுக்கக் கோரி குமாரபாளையம் ஆனங்கூா் பிரிவு சாலையில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளா் சங்கம் சாா்பில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் குமாரபாளையம் நகரத் தலைவா் ஜே.எஸ்.சரவணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் எம்.அசோகன், நகரச் செயலாளா் கே.பாலுசாமி, நகர துணைச் செயலாளா் பி.என்.வெங்கடேசன் ஆகியோா் கோரிக்கையை விளக்கி பேசினா்.

நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். விசைத்தறிகளுக்கு மானிய விலையில் அரசே நூல் வழங்க வேண்டும். உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க பருத்தி ஏற்றுமதியை நிறுத்த வேண்டும். சாயக்கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்திட வேண்டும். விசைத்தறி தொழிலையும், தொழிலாளா்களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலாளா் என்.சக்திவேல், பஞ்சாலை தொழிற்சங்க மாவட்டத் துணைச் செயலாளா் செயலாளா் பி.சண்முகம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com