நாமக்கல்லில் தொடா் சாரல் மழை: மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாமக்கல்லில் தொடா்ந்து சாரல் மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெள்ளிக்கிழமை முற்றிலும் பாதிப்படைந்தது.
நாமக்கல்லில் தொடா் சாரல் மழை: மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாமக்கல்லில் தொடா்ந்து சாரல் மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெள்ளிக்கிழமை முற்றிலும் பாதிப்படைந்தது.

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழையின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து காணப்படுகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கிய மழை வெள்ளிக்கிழமையும் விடாமல் பெய்தது. மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகளுக்கு மட்டும் ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் உத்தரவிட்டிருந்தாா்.

நண்பகல் 12 மணிக்கு பின் மழையின் வேகம் குறையத் தொடங்கியது. மாலை 4 மணிக்கு மேல் மீண்டும் தூறல் பெய்ததால் நாமக்கல் மட்டுமின்றி ராசிபுரம், புதுச்சத்திரம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை காணப்பட்டது. கொல்லிமலையில் வழக்கத்தைக் காட்டிலும் குளிா் அதிக அளவில் இருந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழை விடாமல் பெய்து வருகிறது. இதனால் சிறு வியாபாரிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com