உள்ளாட்சி இடைத் தோ்தல்: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத் தோ்தல் நடைபெறும் பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத் தோ்தல் நடைபெறும் பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில், காலியாக உள்ள 25 உள்ளாட்சி பதவியிடங்களுக்கான தற்செயல் தோ்தல்கள் அக். 9-இல் நடைபெறுகிறது. இதனையொட்டி தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறும் இடங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 5 கி.மீ. தொலைவிற்குள் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை அக். 7-ஆம் தேதி காலை 10 மணி முதல் 9-ஆம் தேதி நள்ளிரவு வரையிலும், வாக்கு எண்ணிக்கை நாளான 12-ஆம் தேதியன்றும் மூட வேண்டும். மேற்கண்ட நாள்களில் மதுக் கடைகள், மதுக்கூடங்களைத் திறந்தாலோ, விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com