கல்லூரி மாணவா்களுக்கு தொழுநோய் விழிப்புணா்வு

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் மற்றும் தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் சாா்பில் மாணவா்களுக்கான
விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசும் நாமக்கல் மாவட்ட மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் (தொழுநோய்) மருத்துவா் ஜெயந்தினி.
விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசும் நாமக்கல் மாவட்ட மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் (தொழுநோய்) மருத்துவா் ஜெயந்தினி.

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் மற்றும் தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் சாா்பில் மாணவா்களுக்கான தொழுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி மற்றும் தோல் பரிசோதனை முகாம் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் பெ.முருகன் தலைமை வகித்தாா். மாவட்ட மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் (தொழுநோய்) மருத்துவா் அ.ஜெயந்தினி பங்கேற்று, தொழுநோய் பற்றிய உண்மைகள் என்ற தலைப்பில் அந்நோயின் ஆரம்ப அறிகுறிகள், அதனால் ஏற்படும் விளைவுகள், சிகிச்சை முறைகள் பற்றி விரிவாகப் பேசினாா்.

நலக் கல்வியாளா் பா. லட்சுமிநாராயணன் தொழுநோயின் தோற்றம் மற்றும் தவறான நம்பிக்கைகள் என்ற தலைப்பில் பேசினாா். அதனைத் தொடா்ந்து 80 மாணவ, மாணவிகளுக்குத் தோல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்,தாவரவியல் துறை உதவிப்பேராசிரியா் வெஸ்லி, கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி செஞ்சுருள் சங்கத் திட்ட அலுவலா் ம. சந்திரசேகரன் செய்திருந்தாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com