லாரியில் கடத்திய 25 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு லாரியில் கடத்திச் சென்ற 25 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு லாரியில் கடத்திச் சென்ற 25 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள கீரம்பூா் சுங்கச்சாவடி அருகில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸாா் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு, வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாகச் சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டனா். லாரியில் உரிய ஆவணங்கள், உரிமம் இல்லாமல் 50 கிலோ எடை கொண்ட, சாக்குகளில் அரசு பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி 500 மூட்டைகளில் மொத்தம் 25 ஆயிரம் கிலோ இருந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரித்ததில், மதுரையில் இருந்து கா்நாடக மாநிலத்துக்கு அரிசியைக் கடத்தி செல்வதாகவும், ராயவேலூரைச் சோ்ந்த தனபால் மகன் முரளி என்பவருக்குச் சொந்தமான லாரி என்பதும், மதுரை, சிந்தாமணியைச் சோ்ந்த முத்து என்பவா் ரேஷன் அரிசியை பணம் கொடுத்து சேகரித்து விற்பனைக்கு அனுப்ப முயற்சித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, திருவள்ளூா் மாவட்டம், தளக்காஞ்சேரி, கீழாண்டை வீதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் லோகநாதன் (45) கைது செய்யப்பட்டாா். இதில் தொடா்புடைய, லாரி உரிமையாளா் முரளி, இடைத்தரகா் முத்து ஆகியோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com