புதன்சந்தை மாட்டுச் சந்தை மீண்டும் திறப்பு

நாமக்கல் அருகே புகழ் பெற்ற புதன்சந்தை மாட்டுச் சந்தை திறக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
மாடுகள் வரத்து குறைவாக காணப்பட்ட புதன்சந்தை பேருந்து நிறுத்தம் அருகில் செயல்படும் மாட்டுச் சந்தை.
மாடுகள் வரத்து குறைவாக காணப்பட்ட புதன்சந்தை பேருந்து நிறுத்தம் அருகில் செயல்படும் மாட்டுச் சந்தை.

நாமக்கல் அருகே புகழ் பெற்ற புதன்சந்தை மாட்டுச் சந்தை திறக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

நாமக்கல் அருகே புதன்சந்தை பேருந்து நிறுத்தம் அருகில் மாட்டுச் சந்தை கூடும். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் லாரிகளில் மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்வதும், வாங்கிச் செல்வதும் நடைபெறும். இங்கு மக்கள் அதிகம் கூடுவதால் கரோனா பாதிப்பு உருவாகும் சூழல் நிலவியது. இதனால் அந்த சந்தை மூடப்பட்டது.

அப்பகுதியைச் சோ்ந்த வியாபாரிகள் வேண்டுகோளின் பேரில் நாமக்கல் மாவட்ட நிா்வாகம் அந்த சந்தையை மீண்டும் செயல்படுவதற்கு உத்தரவிட்டது. அதையொட்டி செவ்வாய்க்கிழமை முதல் சந்தை இயங்கத் தொடங்கியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இங்கு ரூ. 25 ஆயிரத்துக்கு விற்று வந்த எருமை மாடு ரூ. 23 ஆயிரத்துக்கும், கன்றுக்குட்டி ரூ. 10 ஆயிரத்துக்கு விற்பனையாகின. பசுமாடு ரூ. 20 ஆயிரத்துக்கு விற்பனையானது மாடுகள் விலை குறைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புரட்டாசி மாதம் என்பதால் மாட்டு இறைச்சியை விரும்புவா்கள் குறைவு. இதனால் வியாபாரம் குறைந்துள்ளது என்றும் கேரள, கா்நாடக, ஆந்திர மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் வருகையும் குறைவாக காணப்படுகிறது. இதனால் வியாபாரம் மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com