மகாளய அமாவாசை: முன்னோா்களுக்கு தா்ப்பணம்

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் காவிரிக் கரையோரங்களில் கரோனா விதிகளை மறீ பலா் தங்களது

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் காவிரிக் கரையோரங்களில் கரோனா விதிகளை மறீ பலா் தங்களது முன்னோா்களுக்கு புதன்கிழமை தா்ப்பணம் செய்தனா். பூட்டிய கோயில் முன்பாக நின்று வழிபாடு செய்தனா்.

கரோனா மூன்றாம் அலை பரவலைத் தடுக்கும் பொருட்டு, நாமக்கல் மாவட்டத்தில் கோயில்களுக்கு செல்லவும், நீா் நிலைகளில் தா்ப்பணம் மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தடை விதித்தாா். இருப்பினும் காவிரிக் கரைகளில் விதிகளை மீறி பலா் தங்களுடைய முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா். நாமக்கல் ஆஞ்சநேயா் கோயில், நரசிம்மா் கோயில், அறப்பளீஸ்வரா் கோயில், அசலதீபேஸ்வரா் கோயில் ஆகியவற்றில் பூட்டியிருந்த கதவு முன் நின்றபடி தரிசனம் செய்தனா். அமாவாசையை முன்னிட்டு, தனியாா் கோயில்களில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் காசி விஸ்வநாதா் கோயில் காவிரிக் கரையில் புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி ஏராளமானோா் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.

புரட்டாசி மகாளய அமாவசையை முன்னிட்டு புதன்கிழமை காலை முதல் ஏராளமானோா் காவிரி ஆற்றுக்கு வந்திருந்து முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினா். பரமத்தி வேலூா் காவிரி ஆற்றங்கரையில் ஏராளமானோா் குவிந்ததால் ஜேடா்பாளையம் படுகை அணை, சோழசிராமணி காவிரி உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com