மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு: ஆட்சியா் தகவல்

பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யும் பணி நடைபெறுகிறது.

பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யும் பணி நடைபெறுகிறது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில், 4-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரையில் வேலைவாய்ப்புப் பதிவு பணி அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறுகிறது. பதிவுப்பணி நடைபெறும் 15 நாள்களுக்கும் மதிப்பெண் சான்றிதழ் வழங்க தொடங்கிய முதல் நாளையே பதிவு மூப்பு தேதியாக கணக்கில் கொண்டு பதிவு எண் வழங்கப்படும்.

மேலும்  வேலைவாய்ப்புத் துறை இணையதளம் வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்று வேலைவாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் அனைத்து மாணவ, மாணவிகளும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் பதிவுகள் மேற்கொள்ளும் போது அரசு விதித்துள்ள கரோனா வழிமுறைகளான சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக் கவசம் அணிதல், கைகளை சோப்பினால் கழுவுதல் மற்றம் கிருமி நாசினி பயன்படுத்திட அறிவுறுத்துதல் போன்றவைகளை கடைப்பிடித்து செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com