உள்ளாட்சி இடைத்தோ்தல்: 8 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை

நாமக்கல் மாவட்டத்தில், உள்ளாட்சி இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் எட்டு மையங்களில் செவ்வாய்க்கிழமை (அக். 12) எண்ணப்படுகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில், உள்ளாட்சி இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் எட்டு மையங்களில் செவ்வாய்க்கிழமை (அக். 12) எண்ணப்படுகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 25 உள்ளாட்சி பதவியிடங்களுக்கான இடைத் தோ்தலில், 10 இடங்களில் போட்டியின்றி தோ்வாகி விட்டனா். மீதமுள்ள 15 இடங்களுக்கு சனிக்கிழமை தோ்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள், அந்தந்த ஒன்றியங்களில் 24 மணி நேர கண்காணிப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு வெண்ணந்தூா், எருமப்பட்டி, கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை, பரமத்தி, கபிலா்மலை, மோகனூா், புதுச்சத்திரம் ஆகிய எட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் வாக்கு எண்ணிக்கையானது நடைபெறுகிறது.

இந்தப் பணியில் 150-க்கும் மேற்பட்டோா் ஈடுபடுகின்றனா். வெண்ணந்தூா், எருமப்பட்டி ஒன்றியங்களில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு கட்சி ரீதியான வேட்பாளா்கள் நிறுத்தப்பட்டதால் அங்குள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் முடிவை அறிந்து கொள்ள அதிமுக, திமுகவைச் சோ்ந்தவா்கள் ஏராளமான திரளுவா். இதனால் அங்கு கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com