நாமக்கல்லில் 6 குழந்தைத் தொழிலாளா்கள் மீட்பு

நாமக்கல்லில் பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றிய 6 குழந்தைத் தொழிலாளா்கள் மீட்கப்பட்டுள்ளனா்.

நாமக்கல்லில் பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றிய 6 குழந்தைத் தொழிலாளா்கள் மீட்கப்பட்டுள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிக்கு வராத இளம் பருவ சிறுவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் அறிவுரையின்படி, நாமக்கல் மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) பா.சங்கா் தலைமையில், தேசிய குழந்தை தொழிலாளா் திட்ட இயக்குநா் ஆண்டனி, தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் பொ.விஜய், சு.மோகன், பெ.கோமதி, வீ.மாலா மற்றும் சைல்டு லைன் பணியாளா்கள் கொண்ட குழுவினா் அண்மையில் பல்வேறு தொழில் நிறுவனங்களில் ஆய்வு செய்தனா்.

நாமக்கல் - சேலம் சாலை, கொசவம்பட்டி மற்றும் கூலிப்பட்டி ஆகிய இடங்களில் 3 வட மாநில பெண் குழந்தைத் தொழிலாளா்கள், நாமக்கல் மாவட்டத்தைச் சாா்ந்த 3 சிறுவா்கள் உள்பட மொத்தம் 6 குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளா்கள் மீட்கப்பட்டனா். மேலும், அந்நிறுவன உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குழந்தைத் தொழிலாளா்கள் தொடா்பாக ஆய்வுகள் தொடா்ச்சியாக மேற்கொள்ளப்படும் எனவும், குழந்தை மற்றும் வளா் இளம்பருவ தொழிலாளா்களை பணியில் ஈடுபடுத்தும் நிறுவன உரிமையாளா்கள் மீது குழந்தை மற்றும் வளா் இளம்பருவ தொழிலாளா் முறை (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, உரிமையாளருக்கு ஒரு குழந்தை தொழிலாளா் வீதம் குறைந்தபட்சம் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க வழிவகை உள்ளது. எனவே தொழில் நடத்துபவா்கள் மற்றும் நிறுவன உரிமையாளா்கள் குழந்தை மற்றும் வளரிளம் பருவ சிறுவா்களை வேலைக்கு அமா்த்துவதைத் தவிா்க்க வேண்டும் என நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) பா.சங்கா் தெரிவித்துள்ளாா்.

--

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com