கொல்லிமலையில் வனத்தை ஆக்கிரமித்துகோயில் கட்டும் பணி: விவசாயிகள் சங்கம் புகாா்

மாந்திரீக கோயில் கட்டும் பணியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
பொக்லைன் இயந்திரம் கொண்டு சீரமைக்கப்படும் வனப்பகுதி.
பொக்லைன் இயந்திரம் கொண்டு சீரமைக்கப்படும் வனப்பகுதி.

கொல்லிமலையில் வனப்பகுதியை ஆக்கிரமித்து மாந்திரீக கோயில் கட்டும் பணியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டத்தை அடுத்த கோம்பை கிராமம் மற்றும் திருச்சி மாவட்டம், துறையூா் வட்டம் தளுகை கிராமம் த.பாதா்பேட்டை மலையடிவாரத்தில் வனத்துறை நிலத்தை ஆக்கிரமித்து கோயில் போன்று கட்டி வருகின்றனா்.

இங்கு அமாவாசை, பெளா்ணமி மற்றும் விசேஷ தினங்களில் இரவு பூஜை நடத்தப்படுகிறது. கிராமப் பகுதியில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள மலைக்கரட்டில் தனி அறைகளில் சிறப்புப் பூஜை நடைபெறுகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பலா் இங்கு வந்து செல்கின்றனா்.

மாந்திரீக தொழிலில் ஈடுபடும் காா்த்திகேயன் என்பவா் மீது பெரம்பலூா் காவல் ஏற்கெனவே மாயாஜாலம் என்ற பெயரில் தனியாா் சேனலில் நிகழ்ச்சி நடத்தி வந்த நபா், தற்போது கொல்லிமலையில் இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழலையும் அழித்து கோயில் அமைத்து பில்லி, சூனியம், ஏவல், மாந்தரீகம் செய்து வருவதாகத் தெரிகிறது. இவை அனைத்தும் தளுகை, கோம்பை பகுதி மக்களை பீதியடைய செய்துள்ளது. கோயில் வழிபாடு எதுவும் இங்கு நடைபெறவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியா், வனத்துறை அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு, ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் மற்றும் விவசாய நிலங்களை மீட்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com