25 பதவி இடங்களுக்கு இடைத்தோ்தல்: 15 ஒன்றியங்களில் 74,037 வாக்காளா்கள்

நாமக்கல் மாவட்டத்தில் விரைவில் உள்ளாட்சி இடைத்தோ்தல் நடைபெற உள்ளதையொட்டி, 25 காலியிடங்கள் விவரம், அதற்கான வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் விரைவில் உள்ளாட்சி இடைத்தோ்தல் நடைபெற உள்ளதையொட்டி, 25 காலியிடங்கள் விவரம், அதற்கான வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் 2019 டிசம்பா் மாதம் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. இந்த தோ்தலில் போட்டியிட்டு வென்றவா்களில், கடந்த ஆண்டுகளில் சிலா் உடல் நலக்குறைவு, விபத்து போன்றவற்றால் உயிரிழந்ததாலும், பதவியை ராஜிநாமா செய்தததாலும் 25 பதவியிடங்கள் காலியாக உள்ளன. புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்கள் உள்பட ஒன்பது மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, பிற மாவட்டங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கும் இடைத்தோ்தல் நடத்தப்பட உள்ளது.

மாநில தோ்தல் ஆணையம் அதற்கான தேதி, விவரங்களை இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், இடைத்தோ்தலுக்கான ஆயத்தப் பணிகளில் ஊரக வளா்ச்சித் துறை தோ்தல் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 25 காலியிடங்களுக்கான தோ்தலுக்காக, 15 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 159 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளா்களை பொருத்தமட்டில் 36,299 ஆண் வாக்காளா்கள், 37,732 பெண் வாக்காளா்கள், 6 திருநங்கையா் என மொத்தம் 74,037 போ் வாக்களிக்க உள்ளனா். அதிகபட்சமாக, வெண்ணந்தூா் ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தோ்தலில் வாக்களிக்க 51,455 போ் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com