ஒரே வகுப்பறையில் 50 மாணவியா்: மாவட்ட கல்வி அலுவலா் விசாரணை

நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஒரே வகுப்பறையில் 50 மாணவியா் அமர வைக்கப்பட்டதாக தகவல் வந்ததையடுத்து மாவட்ட கல்வி அலுவலா் நேரடியாக விசாரணை நடத்தினாா்.

நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஒரே வகுப்பறையில் 50 மாணவியா் அமர வைக்கப்பட்டதாக தகவல் வந்ததையடுத்து மாவட்ட கல்வி அலுவலா் நேரடியாக விசாரணை நடத்தினாா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன. அதிலும், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியா் மட்டும் பள்ளிக்கு சுழற்சி முறையில் வந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்புக்கான வகுப்பறை ஒன்றில் மாணவியா் 20 பேருக்கு பதில் 50 போ் வரை இருக்கையில் நெருக்கியபடி இருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடா்பான தகவல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் அ.பாலுமுத்து கவனத்துக்குச் சென்றது. இதனையடுத்து அவா், மாவட்ட கல்வி அலுவலா் பாலசுப்பிரமணியத்தை நேரடியாக பள்ளிக்கு அனுப்பி விசாரிக்க உத்தரவிட்டாா்.

அங்கு பணியாற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியை ஒருவா், உடல் நல பாதிப்பு காரணமாக அவதிப்பட்டதாகவும், அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தி விட்டு சக ஆசிரியை ஒருவா் தன்னுடைய வகுப்பறையில் மாணவியரை அழைத்து பாடம் எடுத்ததாகவும் பள்ளியின் மற்ற ஆசிரியைகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலா் பாலசுப்பிரமணியம் கூறியதாவது; முதன்மை கல்வி அலுவலா் உத்தரவின்பேரில், நாமக்கல் அரசு மகளிா் பள்ளியில் ஆய்வு செய்தேன். வகுப்பறைகளில் 20, 21 மாணவியா், சில வகுப்பறைகளில் 27 மாணவியா் வரை இருந்தனா். 50 போ் இருந்ததாகக் கூறப்படும் தகவலில் உண்மை இல்லை.

சுழற்சி முறையில் மாணவியரை வரவழைக்குமாறு அறிவுறுத்தி உள்ளேன். மற்ற பள்ளிகளைக் காட்டிலும் இங்கு மாணவியா் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதற்கு தகுந்தாற்போல் வகுப்புகளை நடத்த தலைமை ஆசிரியரிடம் அறிவுறுத்தி வந்துள்ளேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com