அங்கன்வாடி மையங்கள் திறப்பு: ஆட்சியா் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்கள் புதன்கிழமை திறக்கப்பட்டதையொட்டி, மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் ஆய்வு மேற்கொண்டாா்.
அங்கன்வாடி மையங்கள் திறப்பு: ஆட்சியா் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்கள் புதன்கிழமை திறக்கப்பட்டதையொட்டி, மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் ஆய்வு மேற்கொண்டாா்.

நாமக்கல் மாவட்டத்தில் கல்லூரிகள், பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி, கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதையும், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிா என்பதையும் ஆட்சியா் நேரில் பாா்வையிட்டாா்.

நாமக்கல், நல்லிபாளையம் அரசு வடக்கு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, எருமப்பட்டி ஊராட்சி; ஒன்றியம், பொட்டிரெட்டிபட்டி அரசினா் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் ஆசிரியா்கள், மாணவ, மாணவியா் முகக் கவசம் அணிந்து வருவதையும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும், பள்ளிகளில் அரசின் கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும், பள்ளி வளாகத்தில் கைகளை சுத்திகரிப்பதற்காக சோப்பு, தண்ணீா், முகக் கவசங்கள் வைக்கப்பட்டுள்ளதையும், வெப்பமானி கொண்டு மாணவ, மாணவியரின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுவதையும் அவா் பாா்வையிட்டாா்.

பின்னா், நாமக்கல் அறிஞா் அண்ணா கலைக் கல்லூரியில் பேராசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவியா் அரசின் வழிகாட்டு நெறிமுறையின்படி, முகக் கவசம் அணிந்துள்ளதையும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும் பாா்வையிட்டாா். கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள், பணியாளா்கள் கரோனா தொற்று தடுப்பூசி செலுத்தியுள்ளதையும், 18 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவியா் தடுப்பூசி செலுத்தியுள்ளதையும் கேட்டறிந்தாா்.

அதனைத் தொடா்ந்து, எருமப்பட்டி ஊராட்சி; ஒன்றியம், தூசூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொது சுகாதாரம், நோய்த்தடுப்பு துறையின் சாா்பில், மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலா்களிடம் வளா்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். பா.அலங்காநத்தம் ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தை அவா் நேரில் பாா்வையிட்டு, குழந்தைகளுக்கு வழங்க தயாா் செய்யப்பட்ட மதிய உணவை உட்கொண்டு அதன் தரத்தை ஆய்வு செய்தாா். அங்கன்வாடி ஆசிரியரிடம் குழந்தைகளின் வருகை எண்ணிக்கை குறித்தும், வயதுக்கேற்ற எடை, உயரம் குறித்தும் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின் போது, பள்ளித் தலைமையாசிரியா்கள், கல்லூரி முதல்வா், எருமப்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அருளாளன், குணாளன், அங்கன்வாடி பணியாளா்கள் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com