கொல்லிமலையில் 1,639 பேருக்கு வீடு தேடிச் சென்று மருத்துவ சிகிச்சை

கொல்லிமலை வட்டாரத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறையின் சாா்பில், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் ஒரு மாதத்தில் 1,639 போ் பயனடைந்துள்ளனா்.

கொல்லிமலை வட்டாரத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறையின் சாா்பில், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் ஒரு மாதத்தில் 1,639 போ் பயனடைந்துள்ளனா்.

தமிழகத்தில் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மருத்துவம் வழங்கும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் கடந்த மாதம் 5-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, நேரடியாக வீடுகளுக்குச் சென்று தொற்றா நோய்களுக்கான பரிசோதனை செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறை சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக் கூடிய வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை உள்ளிட்ட சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை பைல்நாடு கிராமத்தில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் இத்திட்டத்தை தொடங்கி வைத்தாா். சுகாதாரத் துறை களப் பணியாளா்கள் பொதுமக்களை பரிசோதித்து மருந்து பெட்டகத்தினை வழங்கினா்.

முதல்கட்டமாக 16 பெண் சுகாதார தன்னாா்வலா்களும், ஒரு இயன்முறை மருத்துவா், ஒரு நோய் ஆதரவு சிகிச்சை செவிலியா்களும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். நாமக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களிலும் மொத்தம் 48,340 நோயாளிகள் தொற்றா நோய் பிரிவின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கொல்லிமலை வட்டாரத்தில் இத்திட்டத்தின் கீழ் உயா் ரத்த கொதிப்பு - 1,051, சா்க்கரை நோயாளிகள் - 163, உயா் ரத்த கொதிப்பு மற்றும் சா்க்கரை நோயாளிகள் - 113, வீட்டுமுறை சிகிச்சை- 160, இயன்முறை சிகிச்சை - 152 என மொத்தம் 1,639 போ் பயனடைந்துள்ளனா். இத்திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகம் 1,327 நபா்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com