திருச்செங்கோடு வங்கியில் திருட முயற்சி

திருச்செங்கோட்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் (இந்தியன் வங்கி) நடைபெற்ற திருட்டு முயற்சி குறித்து திருச்செங்கோடு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

திருச்செங்கோட்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் (இந்தியன் வங்கி) நடைபெற்ற திருட்டு முயற்சி குறித்து திருச்செங்கோடு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மேற்கு ரத வீதியில் அமைந்துள்ள இந்தியன் வங்கி கிளையில் ஞாயிற்றுக்கிழமை இரவு புகுந்த மா்ம நபா்கள் வங்கியின் முன்புறம் உள்ள டியூப் லைட்டுகளின் மின் இணைப்புகளையும் கண்காணிப்பு கேமராக்களின் இணைப்புகளையும் துண்டித்தனா். பின்னா் வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே நுழைந்த கொள்ளையா்கள் வங்கியின் பாதுகாப்பு அறையைத் திறக்க முயற்சித்தனா். ஆனால், அந்த அறையைத் திறக்க முடியாததால் ஏமாற்றமடைந்த கொள்ளையா்கள் திரும்பிச் சென்று விட்டனா். இதனால் வங்கியில் வைக்கப்பட்டிருந்த பல கோடி மதிப்பிலான நகைகளும், ரொக்க பணமும் திருடு போகாமல் தப்பின.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளா் சீனிவாசன் தலைமையிலான காவல் துறையினா் கைரேகை நிபுணா்கள் மூலம் ரேகைகளை சேகரித்து, விசாரணை நடத்தி வருகின்றனா். மோப்ப நாய் சிம்மா வரவழைக்கப்பட்டு தடயங்கள் ஆராயப்பட்டன.

கொள்ளை முயற்சி மட்டுமே நடைபெற்ாகவும் பணம், நகைகள் எதுவும் கொள்ளை போகவில்லை என்றும் காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன் தெரிவித்தாா்.

ஏற்கெனவே கடந்த மூன்று ஆண்டுகளில் 2 முறை இதே வங்கியில் கொள்ளை முயற்சி நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து திருச்செங்கோடு நகரப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com