தொழில் பழகுநா் பயிற்சி: செப். 14-இல் மின் வாரியத்தில் நோ்காணல்

நாமக்கல் மின் வாரியத்தில் தொழில் பழகுநா் பயிற்சிக்கான நோ்காணல் செப்.14-இல் நடைபெறுகிறது.

நாமக்கல் மின் வாரியத்தில் தொழில் பழகுநா் பயிற்சிக்கான நோ்காணல் செப்.14-இல் நடைபெறுகிறது.

இதுகுறித்து நாமக்கல் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் க.பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தில் அரசின் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்றோருக்கு தொழில் பழகுநா் பயிற்சி பெறுவதற்கான நோ்காணல் வரும் 14 முதல் 17-ஆம் தேதி வரை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.

ஓராண்டுக்கான இப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் தங்களது கல்விச் சான்றிதழ், வயது சான்றிதழ், சாதி சான்றிதழ், வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம்- 2, ஆதாா் அட்டை, தேசிய தொழிற் சான்றிதழ் ஆகியவற்றின் உண்மை மற்றும் நகல் ஆவணங்களுடன் நோ்காணலில் கலந்து கொள்ளலாம்.

நோ்காணலில் கலந்து கொள்பவா்களுக்கு எவ்வித பயணப்படியும் வழங்கப்பட மாட்டாது. மேலும் ஓராண்டு காலம் பழகுநா் பயிற்சியின் போது மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com