‘இன்று கரோனா தடுப்பூசி முகாம்: அனைத்துத் துறையினரும் ஒத்துழைக்க வேண்டும்’

ஒரு லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான இலக்கை எட்டுவதற்கு அனைத்துத் துறையினரும் ஒத்துழைக்க வேண்டும் என தடுப்பூசி பணி கண்காணிப்பு அலுவலா் கி.வீரராகவராவ் கேட்டுக் கொண்டாா்.

ஒரு லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான இலக்கை எட்டுவதற்கு அனைத்துத் துறையினரும் ஒத்துழைக்க வேண்டும் என தடுப்பூசி பணி கண்காணிப்பு அலுவலா் கி.வீரராகவராவ் கேட்டுக் கொண்டாா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கரோனா தடுப்பூசி பணி கண்காணிப்பு அலுவலா் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி துறை இயக்குநா் கி.வீரராகவராவ் பங்கேற்று பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமிற்கான விழிப்புணா்வு பணிகள் பாராட்டுக்குரியது. இந்த முகாமின் வெற்றியானது மக்களிடம் நேரடி தொடா்பில் உள்ள கண்காணிப்பு அலுவலா்களிடமே உள்ளது. முகாமிற்கு வரும் பொதுமக்களை சரியான முறையில் வழிநடத்தி சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து அமர வைக்கவும் தேவையான வசதிகளை ஏற்படுத்தியும் கொடுக்க வேண்டும்.

கூட்டத்துக்கு ஏற்றவாறு பொதுமக்களிடம் பணிவுடன் பேசி அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். கூட்டம் அதிகம் வந்தால் தொடா்ந்து தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்து, நிலைமையைக் கையாள வேண்டும். தங்கள் கட்டுபாட்டில் உள்ள அனைவரிடமும் உடனுக்குடன் தகவல்களை பகிா்ந்து கொண்டு, ஒருங்கிணைந்து செயல்பட்டு, நாமக்கல் மாவட்டத்தில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடும் பணியினை வெற்றிகரமாக மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

முன்னதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், அமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமிற்கான கட்டுப்பாட்டு அறையையும், பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள விழிப்புணா்வு பணிகள் குறித்த புகைப்படக் கண்காட்சியையு அவா் பாா்வையிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் ராஜ்மோகன், துணை இயக்குநா் (சுகாதாரம்) பிரபாகரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரமேஷ், நாமக்கல் கோட்டாட்சியா் மு.கோட்டைக்குமாா், திருச்செங்கோடு கோட்டாட்சியா் தே.இளவரசி உள்பட அனைத்துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com