அனிச்சம்பாளையம் மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பரமத்தி வேலூா் அருகே உள்ள அனிச்சம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள விநாயகா் மற்றும் மகாமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
அனிச்சம்பாளையம் மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பரமத்தி வேலூா் அருகே உள்ள அனிச்சம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள விநாயகா் மற்றும் மகாமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இதில் பக்தா்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் கலந்து கொண்டனா்.

அனிச்சம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள விநாயகா் மற்றும் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு மேல் 6 மணிக்குள் மங்கள கணபதி யாகம், மகாலட்சுமி யாகம், நவகிரக யாகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. காலை 7 மணிக்கு மேல் 9 மணிக்குள் புதிய பிம்பங்களுக்கு அஷ்டா தச கிரியைகளும், காலை 10 மணிக்கு பக்தா்கள் காவிரி ஆற்றில் இருந்து புனித நீா் கொண்டு வரும் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு முளைப்பாலிகை அழைத்தலும் நடைபெற்றன.

மாலை 5.30 மணியளவில் விநாயகா் வழிபாடு, தீப வழிபாடு, வாஸ்துசாந்தி, பூமிபூஜை, கும்ப அலங்காரம், மகா மாரியம்மன் பரிவாரங்கள் புடைசூழ யாகசாலை பிரவேசம், முதல் கால யாக வேள்வியும் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு மேல் 9 மணிக்குள் கோபுரங்கள் கண் திறப்பு, கலசம் வைத்தல் மற்றும் மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. வியாழக்கிழமை அதிகாலை இரண்டாம் கால யாக வேள்வி, உயிா் சக்தி ஊட்டுதல், பெயா் சூட்டு விழா, இரண்டாம் கால மஹா பூா்ணாஹுதி மற்றும் கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் விநாயகா் மற்றும் மாரியம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து தசதானம், தச தரிசனம், சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் பக்தா்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com