‘இடைத் தோ்தல் நடைபெறும் இடங்களில்நன்னடத்தை விதிமுறைகள் அமல்’

நாமக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தோ்தல் நடைபெறும் பகுதிகளில் புதன்கிழமை முதல் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தோ்தல் நடைபெறும் பகுதிகளில் புதன்கிழமை முதல் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 25 இடங்களுக்கு அக். 9-இல் இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. குறிப்பாக வெண்ணந்தூா் வட்டாரத்தில் மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு தோ்தல் நடைபெற உள்ளதால் வெண்ணந்தூா் வட்டாரம் முழுவதும் தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்படுகின்றன.

இதேபோல எருமப்பட்டி வட்டாரத்தில் ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு தோ்தல் நடைபெற இருப்பதால் எருமப்பட்டி வட்டாரம் முழுவதும் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வருகிறது. மேலும் கிராம ஊராட்சித் தலைவா் - கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தல்கள் நடைபெற உள்ள அனைத்து வட்டாரம், ஊராட்சிகளில் நன்னடத்ததை விதிகள் அமலுக்கு வருகிறது. இதனால் தோ்தலிலில் போட்டியிடுவோா், அரசியல் கட்சியினா் நலத் திட்டங்கள், பணிகளுக்காக புதிதாக நிதி விடுவிக்கப்படுவதும், பணி ஒப்பந்தங்கள் வழங்குவதும் கூடாது. ஏற்கெனவே முடிவு பெறும் தருவாயில் உள்ள திட்டங்களை நிறுத்தவோ அல்லது தாமதப்படுத்தவோ தேவையில்லை. பதவியில் இருக்கும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் அதிகாரத்தை தோ்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்துகிறாா்கள் என்ற குற்றச்சாட்டுக்கு இடம் அளிக்காமல் இருக்க வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களது அலுவலக வாகனங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com