கிராமங்களுக்குச் செல்லும்சுகாதார விழிப்புணா்வு வாகனம்
By DIN | Published On : 16th September 2021 01:49 AM | Last Updated : 16th September 2021 01:49 AM | அ+அ அ- |

நாமக்கல்: நாட்டின் 75-ஆவது சுதந்திரன தினத்தை முன்னிட்டு, தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் சுத்தம் மற்றும் சுகாதாரத்தைப் பேணுவது குறித்த விழிப்புணா்வு விளம்பர வாகனம் தொடக்க நிகழ்ச்சி நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவல வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் பங்கேற்றுக் கொடியசைத்து வாகனத்தைத் தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். இதற்காக செய்தி மக்கள் தொடா்புத் துறையின் அதிநவீன மின்னணு திரை கொண்ட வாகனம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த வாகனம் அக். 2-ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமப்புறப் பகுதிகளுக்கும் செல்லவுள்ளது. சுகாதாரத்தைப் பேணுவது தொடா்பாக விடியோ காட்சி வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படவுள்ளது. இந் நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு. வடிவேல், உதவி திட்ட அலுவலா் டி.இன்பா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள், தூய்மை பாரத இயக்க வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் கலந்துகொண்டனா்.