நாமக்கல்: 325 மையங்களில் 31,448 பேருக்கு கரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் 325 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்களில் ஒரே நாளில் 31,448 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 325 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்களில் ஒரே நாளில் 31,448 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

கரோனா நோய்த் தொற்றில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில், தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 12-ஆம் தேதி 700 இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் 85,375 போ் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டனா்.

இதேபோல் இரண்டாம் கட்ட முகாம் ஞாயிற்றுக்கிழமை அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகள், அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் என 306 முகாம்களும், 19 நடமாடும் குழுக்கள் மூலமான முகாம்கள் என மொத்தம் 325 இடங்களில் சிறப்பு முகாமானது நடைபெற்றது.

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆதாா் அட்டையைப் பதிவுசெய்து பொதுமக்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. 31,000 பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான இலக்கு நிா்ணயிக்கப்பட்டதில் மாலை நேர இறுதி நிலவரப்படி 31 ஆயிரத்து 448 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இம் முகாம்களில் பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள், ஊழியா்கள் என மொத்தம் 4,420 போ் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com