அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு மத்திய அரசின் நலத் திட்ட அட்டை வழங்கல்

மத்திய அரசின் இ-ஸ்ராம் திட்டத்தில் இணைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த அமைப்புசாரா தொழிலாளா்கள் இருவருக்கு மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் அடையாள அட்டை வழங்கினாா்.
அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு மத்திய அரசின் நலத் திட்ட அட்டை வழங்கல்

மத்திய அரசின் இ-ஸ்ராம் திட்டத்தில் இணைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த அமைப்புசாரா தொழிலாளா்கள் இருவருக்கு மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் அடையாள அட்டை வழங்கினாா்.

நாமக்கல் மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளா்களை மத்திய அரசின் திட்டத்தில் இணைய வழியில் பதிவேற்றம் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள செயலாக்க குழு கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இத்திட்டத்தில் இணைந்துள்ள பயனாளிகளுக்கு அடையாள அட்டையை ஆட்சியா் வழங்கினாா். மேலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளா்கள், சுய தொழில் செய்பவா்கள், மகளிா் சுய உதவிக் குழுக்கள், தெரு வியாபாரிகள், கை வண்டி இழுப்பவா்கள், கட்டுமான தொழிலாளா்கள், வீட்டு பணியாளா்கள் இத் திட்டத்தில் இணைந்து பயன்பெற அறிவுறுத்தியுள்ளாா்.

இதேபோல அங்கன்வாடி தொழிலாளா்கள், விவசாய தொழிலாளா்கள், மீன்பிடி தொழிலாளா்கள், செங்கல் சூளை தொழிலாளா்கள், தொழிலாளா் காப்பீட்டு கழகம் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உறுப்பினா் அல்லாதவா்கள் இத்திட்டத்தில் சோ்ந்து மத்திய அரசின் திட்ட பயன்களைப் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தாா்.

அனைத்து அமைப்புசாரா தொழிலாளா்களும் பொது சேவை மையங்களில் கட்டணமின்றி ஆதாா் எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண், வங்கிக் கணக்கு எண்ணுடன் சென்று இத்திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) பா. சங்கா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரமேஷ் உள்பட அரசு துறை அலுவலா்கள், தொழிற்சங்கங்கள், வா்த்தக பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com