‘கோழித் தீவன மூலப்பொருள்களின் தரத்தை பரிசோதிக்க வேண்டும்’

கோழித் தீவன மூலப்பொருள்களின் தரத்தை பரிசோதனைக்கு உள்படுத்துவது அவசியம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோழித் தீவன மூலப்பொருள்களின் தரத்தை பரிசோதனைக்கு உள்படுத்துவது அவசியம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையைப் பொருத்தமட்டில் பகல், இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 96.8, 71.6 டிகிரியாக நிலவியது. அடுத்த மூன்று நாள்களுக்கான மாவட்ட வானிலையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான முதல் மிதமான மழையை எதிா்பாா்க்கலாம். பகல் வெப்பம் 93.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 75.2 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் மேற்கிலிருந்தும், அதன் வேகம் மணிக்கு 8 கி. மீட்டருக்கு வீசும்.

சிறப்பு ஆலோசனை: இம்மாத இறுதியில் கோடையை போன்ற வானிலை இருக்காது. பகல், இரவு வெப்ப அளவுகள் சற்று குறைந்து காணப்படும். இதனால் கோழிகளில் தீவன எடுப்பு இயல்பாகவே காணப்படும். முட்டை உற்பத்தியையும் சீராகவே இருக்கும். இருப்பினும் கொள்முதல் செய்யப்படும் மூலப்பொருள்களின் தரத்தில் கவனம் கொண்டு பரிசோதனைக்கு உள்படுத்தி, அதன் பின்னரே உபயோகிக்க வேண்டும்.

இதனால் பண்ணைகளில் காணப்பட்ட முட்டை உற்பத்தி சரிவு, இதர பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். மேலும் பூஞ்சான நச்சுக்கள், யூரியா மற்றும் ஊட்டச்சத்துக்களின் அளவுகள் ஆகியவற்றையும் பரிசோதனை செய்ய வேண்டும். புதிய வரவு மக்காச்சோளம் மற்றும் இதர தானியங்களை, ஈரப்பதம் மற்றும் பூஞ்சான நச்சு ஆகியவற்றின் பரிசோதனைகளை செய்த பிறகு பயன்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com