நாமக்கல்லில் குழந்தைகளுக்கான கரோனா தீவிர சிகிச்சை பிரிவு தொடக்கம்

ரூ. 20 லட்சத்தில் 20 படுக்கைகள் கொண்ட குழந்தைகளுக்கான நவீன கருவிகள் கொண்ட கரோனா தீவிர சிகிச்சை பிரிவை சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ரூ. 20 லட்சத்தில் 20 படுக்கைகள் கொண்ட குழந்தைகளுக்கான நவீன கருவிகள் கொண்ட கரோனா தீவிர சிகிச்சை பிரிவை சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க கரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு கடந்த ஜூன் 7-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்தப் பிரிவில் ஒரு தீவிர சிகிச்சை படுக்கை வசதி, ஒரு அதிதீவிர சிகிச்சை படுக்கை வசதி, ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 6 படுக்கைகளும், நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்த குழந்தைகளுக்கு மருத்துவ கண்காணிப்புக்காக ஸ்டெப் டவுன் வாா்டு, 2 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் தொடா்ச்சியாக, குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க கூடுதல் வசதி ஏற்படுத்தும் வகையில், 20 படுக்கைகளுடன் கூடிய குழந்தைகளுக்கான கரோனா தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவுக்கு சேலத்தை சோ்ந்த காசநோய் ஆராய்ச்சியாளா் மருத்துவா் சேசசைலம் வழங்கிய 20 எண்ணிக்கை இன்ஃபியூசன் பம்ப், 20 எண்ணிக்கை சிரிஞ்ச் பம்ப், 10 எண்ணிக்கை மல்ட்டி பாராமானிட்டா், 20 எண்ணிக்கை குழந்தைகளுக்கான சென்ட்ரல் லைன் கத்தீட்டா் ஆகிய நவீன மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், அரசு மருத்துவ கல்லூரி முதன்மையா் சாந்தா அருள்மொழி, முன்னாள் மக்களவை உறுப்பினா் பி.ஆா்.சுந்தரம் உள்பட மருத்துவ அலுவலா்கள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com