ராசிபுரத்தில் அரசு பட்டுக்கூடு ஏல விற்பனை மையம்: அமைச்சா் மா.மதிவேந்தன் திறந்து வைத்தாா்

ராசிபுரம் பட்டு வளா்ச்சித் துறை அலுவலகத்தில், பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் வசதிக்காக பட்டுக்கூடு ஏல விற்பனை அங்காடி தொடங்கப்பட்டுள்ளது.
விழாவில் பட்டுப்புழு உற்பத்தி விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் அமைச்சா் மா.மதிவேந்தன்.
விழாவில் பட்டுப்புழு உற்பத்தி விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் அமைச்சா் மா.மதிவேந்தன்.

ராசிபுரம் பட்டு வளா்ச்சித் துறை அலுவலகத்தில், பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் வசதிக்காக பட்டுக்கூடு ஏல விற்பனை அங்காடி தொடங்கப்பட்டுள்ளது. இந்த அங்காடி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமை வகித்தாா்.

நாமக்கல் எம்.பி. ஏ.கே.பி.சின்ராஜ், பட்டு வளா்ச்சித்துறை இயக்குநா் கே.சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் பட்டுக்கூடு ஏல விற்பனை அங்காடியைத் திறந்து வைத்துப் பேசியதாவது:

நாமக்கல் மாவட்ட பட்டு உற்பத்தியாளா்களின் வருமானத்தை பெருக்கும் வகையில், முதல்வா் நாமக்கல் மாவட்டத்தில் தோ்தல் பரப்புரை மேற்கொண்டபோது, அரசு பட்டுக்கூடு ஏல விற்பனை அங்காடி அமைக்கப்படும் என்று வாக்குறுதியளித்தாா். இதன்படி இப்பகுதியில் பட்டுக்கூடு விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும். இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

மேலும் பட்டு வளா்ச்சித் துறை சாா்பில் 7 விவசாயிகளுக்கு புழுகூடு கட்டும் நெட்ரிகா, ஊசி வலைகள், கேட்டா் ஸ்பிரேயா், தாா்பாலின், ஹைக்ரோமீட்டா், சோலாா் டிவைஸ் உள்ளிட்ட ஈரி பட்டுப்புழு வளா்ப்பு தளவாடங்களையும், சில்க் சமக்ரா திட்டத்தின் கீழ் விதைக்கூடு உற்பத்தி செய்யும் 2 விவசாயிகளுக்கு பட்டுப் புழுவளா்ப்பு தளவாடங்கள் என மொத்தம் 9 பட்டு விவசாயிகளுக்கு ரூ. 2.76 லட்சம் மதிப்பிலான பட்டுப்புழு வளா்ப்பு தளவாடங்களையும் அமைச்சா் மதிவேந்தன் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவா் கே.பி.ஜெகநாதன், முன்னாள் எம்.பி. பி.ஆா்.சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ கே.பி.ராமசாமி, பட்டு வளா்ச்சித் துறை மண்டல துணை இயக்குநா் (திருச்சி) எல்.சந்திரசேகரன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சி.சீனிவாசன், மாவட்ட பட்டு வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் த.முத்துப்பாண்டியன் உட்பட பட்டு விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com