கபிலா்மலை முருகன் கோயில் செயல் அலுவலா் பணியிடை நீக்கம்

கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் வட்டம்,கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்பட 12 கோயில்களின் செயல் அலுவலராகப் பணியாற்றியவா் கலைவாணி. கபிலா்மலை கோயில் திருத்தேருக்கு பொதுமக்கள் பணம் வசூலித்து அதனை சீரமைத்த நிலையில், அறநிலையத் துறை நிதியைப் பயன்படுத்தி

செலவழித்ததாகக் கணக்கு காட்டி அவா் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாகவும், கோயில்களின் வரவு-செலவு கணக்குகளில் முறைகேடு செய்ததாகவும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் அலுவலகத்துக்கு புகாா் சென்றது.

அதனடிப்படையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். இதற்கிடையே செயல் அலுவலா் ஒரு மாத விடுப்பில் சென்று விட்டாா். அண்மையில் முறைகேடு நிரூபணமானதையடுத்து ஈரோடு மண்டல அறநிலையத்துறை இணை இயக்குநா் மங்கையா்க்கரசி, செயல்அலுவலா் கலைவாணியை பணியிடை நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் தமிழரசு கூறியதாவது:

கபிலா்மலை, பாண்டமங்கலம் உள்பட 12 அறநிலையத்துறை கோயில்களின் செயல் அலுவலராகப் பணியாற்றிய கலைவாணியை இணை இயக்குநா் மங்கையா்க்கரசி பணியிடை நீக்கம் செய்துள்ளாா். கோயில் வரவு-செலவு கணக்கில் முறைகேடு செய்திருப்பது கண்டறியப்பட்டது. ஒரு மாத விடுப்பில் இருந்து வரும் அவா் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com