ஏரிக்கரையில் பனை விதைகளை நடவு செய்த தன்னாா்வலா்கள்

பரமத்தி வேலூா் அருகே உள்ள சின்னகரசப்பாளையம் ஏரிக்கரைப் பகுதியில் பனை விதைகளை நடவு செய்து வரும் தன்னாா்வலா்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.
பனை விதைகளை ஏரிக் கரையோர பகுதியில் நடவு செய்யும் தன்னாா்வலா்கள்.
பனை விதைகளை ஏரிக் கரையோர பகுதியில் நடவு செய்யும் தன்னாா்வலா்கள்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள சின்னகரசப்பாளையம் ஏரிக்கரைப் பகுதியில் பனை விதைகளை நடவு செய்து வரும் தன்னாா்வலா்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள சின்னகரசப்பாளையம் பகுதியில் சுமாா் 200 க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் எஸ்.வாழவந்தி ஏரி உள்ளது. இந்த நிலையில் ஏரிக்கரை பலவீனமாவதைத் தடுக்கும் வகையிலும், நிலத்தடி நீா்மட்டம் உயரும் வகையிலும் அப்பகுதியைச் சோ்ந்த மாணவா் மன்றத்தைச் சோ்ந்த இளைஞா்கள், சமூக ஆா்வலா்கள் அமைப்பை உருவாக்கி, 500-க்கும் மேற்பட்ட பனை விதைகளை ஏரிக்கரை பகுதியில் நட்டு வருகின்றனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

எங்களது கிராமத்தின் தேவைகளை அறிந்து சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை எவ்வித எதிா்பாா்ப்புமின்றி சமூகப் பணியில் ஈடுபட்டு இதுவரை 500 க்கும் மேற்பட்ட பனை விதைகளை நட்டுள்ளோம். இதற்காக பனை விதைகளை நாங்களே சேகரித்துப் பாதுகாத்து நட்டு வருகிறோம். மாவட்ட நிா்வாகம் போதிய ஒத்துழைப்பு அளித்து இப்பகுதியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி பனை விதைகளை தொடா்ந்து நடவு செய்ய உதவ முன்வர வேண்டும் என தெரிவித்தனா். ஏரிக்கரையில் பனை விதைகளை நடவு செய்து வரும் தன்னாா்வலா்களை அப்பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள் பாராட்டி உற்சாகப்படுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com