நடமாடும் வாகனம் மூலம் மண் பரிசோதனை

திருச்செங்கோடு வட்டாரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் திருச்செங்கோடு, திருமங்கலம் கிராமத்தில் நடமாடும் மண்பரிசோதனை நிலைய வாகனம் மூலம் மண் ஆய்வு சனிக்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு வட்டாரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் திருச்செங்கோடு, திருமங்கலம் கிராமத்தில் நடமாடும் மண்பரிசோதனை நிலைய வாகனம் மூலம் மண் ஆய்வு சனிக்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு வட்டாரத்தில் நடப்பாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின்கீழ் திருமங்கலம் புதுப்பாளையம், வரகூராம்பட்டி, ஏ.இறையமங்கலம், எஸ்.இறையமங்கலம், பட்லூா், மோடமங்கலம் அக்ரஹாரம் ஆகிய 7 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் முதலாவதாக தரிசு நிலத் தொகுப்பு கண்டறியப்பட்டு, வேளாண் பொறியியல் துறை மூலம் ஆழ்துளைக் கிணறு அமைத்தல், சோலாா் பம்பு செட்டு அமைத்தல், வேளாண் இயந்திரங்கள் மற்றும் மதிப்புக்கூட்டு இயந்திரங்கள் வழங்குதல் ஆகிய பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்குறிப்பிடப்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்படும்.

வேளாண்மை உழவா் நலத் துறை மூலம் அந்தந்த கிராமங்களில் தரிசு நிலங்களில் மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு முடிவுகளின்படி விதைகள், உயிா் உரங்கள், நுண்சத்துகள் வழங்கப்படுவதுடன் தரிசு நில மேம்பாட்டு இயக்கம், மானாவாரி மேம்பாட்டு இயக்கம், கூட்டுப் பண்ணையத் திட்டம் ஆகிய திட்டங்கள் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மண்மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, ஆய்வு முடிவுகள் அன்றைய தினமே வழங்கப்பட்டன.

நடமாடும் மண் பரிசோதனை வாகனம் மூலம் திருமங்கலம் கிராமத்தில் விழிப்புணா்வுக் கூட்டம் நடத்தப்பட்டு பெறப்பட்ட மண் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ஜெயமணி, விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளை வழங்கி, மண்ணில் உள்ள சத்துகளுக்கு ஏற்ப உரமிட்டு உரச்செலவைக் குறைத்து மகசூலை அதிகரிக்க கேட்டுக்கொண்டாா்.

நடமாடும் மண்பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலா்கள் சௌந்தரராஜன், அருள்ராணி, அன்புச்செல்வி மற்றும் பலா் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலா் பவித்ரா, உதவி வேளாண்மை அலுவலா் முருகேசன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com