அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு கரோனா தொற்று

தருமபுரி அருகே இரண்டு அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த ஆசிரியா்கள், மாணவா்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தருமபுரி அருகே இரண்டு அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த ஆசிரியா்கள், மாணவா்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தருமபுரியை அடுத்துள்ள கடத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து மாணவா் ஒருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. இதற்காக பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொற்றுக்கு உள்ளானவா்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா்.

இதைத்தொடா்ந்து மீண்டும் திங்கள்கிழமை பள்ளி திறக்கப்பட்டது. இருப்பினும், இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் பெற்றோா் கரோனா தொற்று அச்சம் காரணமாக திங்கள்கிழமை தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை.

இதேபோல தருமபுரியை அடுத்த கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் 4 ஆசிரியா்கள், 2 மாணவா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆசிரியா்கள், மாணவா்களை சிகிச்சைக்கு உள்படுத்தி கண்காணித்து வருகின்றனா். மேலும் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com