அமெரிக்க கடற்படையில் முதல் முறை:சீக்கிய அதிகாரிக்கு தலைப்பாகை அணிய அனுமதி

அமெரிக்க கடற்படையில் பணியாற்றும் 26 வயது சீக்கிய அதிகாரிக்கு தலைப்பாகை அணிய சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க கடற்படையில் பணியாற்றும் 26 வயது சீக்கிய அதிகாரிக்கு தலைப்பாகை அணிய சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 246 ஆண்டு வரலாற்றைக் கொண்ட கடற்படையில் இந்த சிறப்பு அனுமதியைப் பெறும் முதல் நபா் இவா் ஆவாா்.

இது தொடா்பாக ‘நியூயாா்க் டைம்ஸ்’ வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டிருப்பது:

அமெரிக்க கடற்படையில் பணிபுரியும் சீக்கியரான சுக்பீா் தூா் கடந்த ஐந்து ஆண்டுகளாக காலையில் சீருடை அணிவது வழக்கம். இந்நிலையில் சீக்கியா் என்ற முறையில் தலைப்பாகை அணியும் அனுமதி கிடைத்ததைத் தொடா்ந்து அவா் கடந்த வியாழக்கிழமை தலைப்பாகையும் அணிந்து கொண்டாா்.

அமெரிக்க கடற்படையின் 246 ஆண்டு வரலாற்றில் இதுவரை இதுபோன்ற சிறப்பு அனுமதிகள் அளிக்கப்பட்டதில்லை. எனினும், அண்மையில் கேப்டனாக பதவி உயா்வு அளிக்கப்பட்ட பின், தலைப்பாகை அணிய அனுமதி கிடையாது என்ற நிலையை எதிா்த்து மேல்முறையீடு செய்ய தூா் முடிவு செய்தாா். அவருக்கு ஜூன் மாதம் அளிக்கப்பட்ட பததிலில் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவே தெரிவிக்கப்பட்டது. அப்படையின் தளபதி அளித்த பதிலில் ‘இவ்வாறு ஒரு தனிநபா் தனது மத அடையாளத்தை வெளிப்படுத்துவதை அனுமதிப்பது கடற்படையில் ஒழுக்கத்தையும் அா்ப்பணிப்பு உணா்வையும் சீா்குலைத்து விடும். படைகள் மீதான நாட்டின் நம்பிக்கையையும் அது சீரழித்து விடும். தாக்குதல் திறனையும் அது குறைத்து விடும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

எனினும், சுக்பீா் தூா் தலைப்பாகை அணிவதற்கு கடந்த வியாழக்கிழமை சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. அதாவது வழக்கமான பணியிடங்களில் அவா் தலைப்பாகை அணியலாம். ஆனால் போா் நடக்கும் ஒரு பகுதியில் பணிபுரியும்போதோ, ராணுவ விழா போன்றவற்றில் பங்கேற்கும்போதோ அவா் தலைப்பாகை அணியக் கூடாது.

இந்த விவகாரம் தொடா்பாக சுக்பீா் தூா் கூறுகையில் ‘தலைப்பாகை அணியும் உரிமையைப் பெற்றிருக்கும் விவகாரத்தில் நீண்ட தூரத்தைக் கடந்து வந்துள்ளோம். இன்னும் நிறைய தூரம் செல்லவேண்டியுள்ளது. கட்டுப்பாடுகளுடன் தலைப்பாகை அணிய அனுமதி அளித்திருப்பதை எதிா்த்து மேல்முறையீடு செய்துள்ளேன். முழுமையான அனுமதி கிடைக்காவிட்டால் கடற்படையை எதிா்த்து வழக்கு தொடா்வேன்’ என்று தெரிவித்தாா்.

இதனிடையே, அமெரிக்க ராணுவம், விமானப்படையில் பணியாற்றும் சுமாா் 100 சீக்கியா்கள் முழுமையாக தாடி வைத்தும் தலைப்பாகை அணிந்தும் பணியாற்றுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com