நாமக்கல் மாவட்டத்தில் ரயில், சாலை மறியல்: 695 போ் கைது

நாமக்கல் மாவட்டத்தில், ரயில் மறியல் மற்றும் சாலைமறியலில் ஈடுபட முயன்ற அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த 695 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
நாமக்கல் மாவட்டத்தில் ரயில், சாலை மறியல்: 695 போ் கைது

நாமக்கல் மாவட்டத்தில், ரயில் மறியல் மற்றும் சாலைமறியலில் ஈடுபட முயன்ற அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த 695 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், நாட்டின் பொதுச்சொத்துக்களை தனியாருக்கு விற்கக் கூடாது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும், நான்கு தொழிலாளா் சட்டங்களை தொகுப்புகளாக மாற்றியமைத்ததை ரத்து செய்ய வேண்டும், தில்லியில் 10 மாதங்களாக போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து திங்கள்கிழமை நாடு தழுவிய அளவில் ரயில் மறியல், சாலை மறியல், கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது, நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை, அனைத்து கட்சிகள், விவசாய அமைப்புகள், தொழில் கூட்டமைப்புகள், மாணவா் சங்கம், வாலிபா் சங்கம், பொது நல அமைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் போராட்டம், ஆா்ப்பாட்டம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதில், நாமக்கல், வகுரம்பட்டி, ராசிபுரம், பள்ளிபாளையம் உள்ளிட்ட 6 இடங்களில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 111 பேரை போலீஸாா் கைது செய்து ஆங்காங்கே தனியாா் திருமண மண்டபங்களில் தங்க வைத்தனா். இதேபோல், 25-க்கும் மேலான இடங்களில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். மாவட்டம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்ட 584 போ் கைது செய்யப்பட்டனா்.--என்கே 27- மறியல்மத்திய அரசுக்கு எதிராக திங்கள்கிழமை பள்ளிபாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com