தொழிற்சங்க கூட்டமைப்பினா் மறியல்

தருமபுரி தலைமை அஞ்சல் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில், திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தொழிலாளா் நலச் சட்டங்களை திருத்துவதைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தருமபுரி தலைமை அஞ்சல் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில், திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த மறியல் போராட்டத்துக்கு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சி.நாகராஜன் தலைமை வகித்து பேசினாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.தேவராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் எஸ்.சின்னசாமி, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் கே.மணி, தொமுச மாவட்டச் செயலா் சண்முகராஜா, எச்எம்எஸ் மாவட்டச் செயலா் அா்ஜுனன், ஐஎன்டியுசி மாவட்டச் செயலா் சென்னகேசவன், சிஐடியு மாவட்டத் தலைவா் பி.ஜூவா ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

இதில், மத்திய அரசு அறிவித்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். தொழிலாளா் நலச் சட்டங்களை சுருக்குவதை கைவிட்டு, தொழிலாளா்களுக்கு எதிரான சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். தேசிய மின்சாரத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த மறியலில் ஈடுபட்டவா்களை தருமபுரி நகர போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com